Enable Javscript for better performance
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    அன்னூர், ஓதிமலை சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தார். பவானி நதிநீர் மற்றும் நிலத்தடிநீர் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பி.என்.ராஜேந்திரன், என்.கே.டி.பொன்னுசாமி, எஸ்.எம்.ஆர் நடராஜ், கே.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் டி.வேணுகோபால் வரவேற்றார்.
    கடந்த ஒரு மாதமாக புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
    உற்பத்தி செலவின் அடிப்படையில் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai