Enable Javscript for better performance
தொழிலாளி கொலை வழக்கு: மேலும் ஒருவர் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    கோவை, சாய்பாபா காலனியில் காயங்களுடன் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் காவல் துறையினரிடம் வியாழக்கிழமை சிக்கினார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டின் பின்புறம் சாக்கடையில் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
    இதைத் தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்றது. விசாரணையில், இறந்தவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆவுடையப்பன் (24) என்பதும், அவர் சூலூரில் உள்ள கோசாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
    இந்த சம்பவம் தொடர்பாக காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த வன்னிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நான், ஆவுடையப்பன், காந்தி, அய்யனார் ஆகியோர் புதன்கிழமை இரவு ஒன்றாக மது அருந்தினோம். அப்போது ஆவுடையப்பன் எனது குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசினார். இதில், ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து ஆவுடையப்பனை கட்டையால் அடித்து அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு தப்பி விட்டோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai