Enable Javscript for better performance
பாரதியார் பல்கலைக்கழக வளாக நேர்காணல்: 38 மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலைக்கழக வளாக நேர்காணல்: 38 மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு

    By DIN  |   Published on : 14th April 2017 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம், அயல் மொழிகள் துறையின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணல் முகாமில் 38 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
    முதுகலை ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்காக, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்துப் பேசினார்.
    இந்த முகாமில் ரத்தினம் கல்விக் குழுமம், பண்ணாரி அம்மன் கல்விக் குழுமம், இந்தியன் பப்ளிக் பள்ளி, குமுதா பப்ளிக் பள்ளி, ஸ்கேல் அப் திறன் பயிற்சி மையம் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த தேர்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கான ஊழியர்களைத் தேர்வு செய்தனர்.
    முகாமில் பங்கேற்ற 12 ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 52 மாணவ-மாணவிகளில் 38 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக ஆங்கில துறைத் தலைவர் சரவணச்செல்வன், தொழில் வழிகாட்டல் துறைத் தலைவர் அ.விமலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai