Enable Javscript for better performance
பெண்ணிடம் 6 பவுன் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    வடவள்ளி, அருள் கார்டனை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர் பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாவது நுழைவாயிலுக்கு எதிரே உள்ள கோயிலுக்கு செல்வதற்காக புதன்கிழமை மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
    வாகனத்தில் வந்த இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai