Enable Javscript for better performance
பெண் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாமளாபுரத்தில் மதுக்கடையை அகற்றக்கோரிய போராட்டத்தில் பெண்களைத் தாக்கிய காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் பெண் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்னர் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் வழக்குரைஞர்கள் கூறியதாவது:
    சாமளாபுரத்தில் நடைபெற்ற மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பெண்களை சரமாரியாக தாக்கியது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றனர். இதில், சுமார் 25-க்கும் மேற்பட்ட பெண் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
    மக்கள் அதிகாரம் அமைப்பினர் 19 பேர் கைது
    இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 19 பேரை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai