Enable Javscript for better performance
மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

    By DIN  |   Published on : 14th April 2017 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, சௌரிபாளையம் பகுதியில் மதுக்கடைகளை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 32 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    கோவை, சௌரிபாளையம் குடியிருப்புப் பகுதியில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக கூறி அந்தக் கடைகளை உடனடியாக அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் 65}ஆவது டிவிஷன் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார்.
    இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், இந்த மதுக்கடைகள் அமைந்துள்ள சாலையில் பெண்கள் நடமாட முடிவதில்லை. பேருந்து நிறுத்தம், குடியிருப்புப் பகுதியில் இந்தக் கடைகள் உள்ளதால் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, உடனடியாக இந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்று என்றனர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அக்கட்சியைச் சேர்ந்த 32 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர்.
    மலுமிச்சம்பட்டியில்...
    கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள மதுக்கடை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
    அன்னூரில்...
    அன்னூர் அருகே குப்பேபாளையம் ஊராட்சி செங்காளிபாளையத்தில் பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்ட மதுக்கடையை ஊழியர்கள் வியாழக்கிழமை திறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு பூட்ட முயற்சித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பிரபாகரன், கருமத்தம்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    இதில், ஒரு மாத காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றி கொள்வதாகவும், அதுவரை இந்த மதுக்கடை திறக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தனர்.
    இதையடுத்து சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai