Enable Javscript for better performance
வறட்சியால் பாதிப்பு : பொள்ளாச்சி அருகே விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வறட்சியால் பாதிப்பு : பொள்ளாச்சி அருகே விவசாயி தற்கொலை

    By DIN  |   Published on : 14th April 2017 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பிச்சாகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகக் கவுண்டர் (75). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால் தென்னை மரங்கள் காயத் துவங்கின. இதைத் தொடர்ந்து, தென்னை மரங்களை காப்பாற்றுவதற்காக பலரிடம் ரூ. 5 லட்சம் கடன் பெற்று தென்னந்தோப்பில் 2 ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். ஆனால், அந்த இரண்டு ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால், மனமுடைந்த ஆறுமுகக் கவுண்டர், தென்னை மரத்துக்கு வைக்கப்படும் பூச்சி மாத்திரையை புதன்கிழமை சாப்பிட்டுள்ளார்.
    மயங்கிய நிலையிலிருந்த ஆறுமுகக் கவுண்டரை அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். நெகமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்துகொள்வது இது முதல்முறை என்று கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai