Enable Javscript for better performance
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th April 2017 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மாருதி சுஸþகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
    இதில், ஏஐடியூசி, சிஐடியூ, எச்.எம்.எஸ்., தொ.மு.ச., எம்.எல்.எஃப்., ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தியாகராஜன், ஆறுமுகம், இளங்கோவன், வீராசாமி, கோவிந்தராஜன், ரத்தினவேலு, தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
    போராட்டத்தில், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    அதேபோல், ஹரியாணா மாநிலத்தில் மாருதி சுஸþகி நிறுவனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai