அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி சிறப்பு வழிபாடு
By DIN | Published on : 15th April 2017 03:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைந்து நிறைவேற வேண்டும் என வேண்டி பொதுமக்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கிராமங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு குப்பேபாளையம், வடவள்ளி, எலப்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், கஞ்சப்பள்ளி, காட்டம்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், திட்ட ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்த தீர்த்தங்களை தங்களது ஊர்களில் உள்ள கோயில்களில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து மூலவர் சிலைகளுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் பங்கேற்றனர்.