Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்தநாள் : பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்தநாள் : பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை

    By DIN  |   Published on : 15th April 2017 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி வடகோவை மத்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    கோவை பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார், மாநிலச் செயலாளர் ஆர்.நந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐ.என்.டி.யூ.சி. மாநிலப் பொதுச் செயலாளர் கோவை செல்வம், கே.பி.எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.சின்னையன் பொதுக் குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சந்திரன், இரா.சுந்தரம், பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கீதா ஹால் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.சங்கர். தலைமை நிலைய செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இதேபோல தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    மேட்டுப்பாளையத்தில்...:கோவை வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் சட்டப்பேரவை தொகுதி செயலர் தொல்குடி மைந்தன், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலர் வை.குடியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சியில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு தென்னை தொழிலாளர்கள் பேரவையின் தலைவர் கருப்புசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    பெரியநாயக்கன்பாளையத்தில்...: மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக கள விளம்பரத் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பெரியநாயக்கன்பாளையத்தில் கொண்டாடப்பட்டது.
    இந்நிகழ்ச்சிக்கு, களவிளம்பரத் துறை அலுவலர் ஹரிநாத் தலைமை வகித்தார். தொடர்ந்து பேச்சு, விநாடி- வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    அன்னூரில்...: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலுமகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர், அன்னூரில் பயணியர் மாளிகை, கரியாம்பாளையம் நான்கு முனை சந்திப்பு ஆகிய
    பகுதிகளில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai