ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
By DIN | Published on : 15th April 2017 03:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், பார்வையற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியே இலவசப் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.