Enable Javscript for better performance
இலவசத் தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் திட்டம் ஆகியன இணைந்து படித்த, படிப்பைத் தொடர முடியாத இளைஞர்களுக்கு 6 மாத கால இலவச தொழிற் பயிற்சியை வழங்கி வருகிறது.
    இப்பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார்.
    சிண்டிகேட் வங்கி மேலாளர் தெய்வசிகாமணி வாழ்த்துரை வழங்கினார். பிரிமியர் பன் லெனின் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளர் நாகராஜன் வேலை வாய்ப்புகள் பற்றி பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai