Enable Javscript for better performance
ஐக்கிய நாடுகளின் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஐக்கிய நாடுகளின் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு தொடக்கம்

    By DIN  |   Published on : 15th April 2017 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐக்கிய நாடுகளின் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஐக்கியநாடுகள் தென்னிந்திய மாதிரி அமைப்பில் ஒரு அங்கமாக கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் நடைபெற்ற இதன் மாநாட்டுக்கு
    பள்ளித் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஏ.பாரி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசுகையில், 'ஒரு மனிதன் ஒழுக்க நிலைகளை கடைப்பிடித்து, பண்பாடு சார்ந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் உலகின் போக்கை மாற்றும் திறமையை பெற முடியும்' என்றார். இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான விவகாரங்கள், பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தீர்வு காணுதல் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.
    இந்த மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 12-16 வயதிற்குள்பட்ட மாணவர்கள் 350 பேர் கலந்து
    கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai