Enable Javscript for better performance
காவல் ஆய்வாளரைக் கண்டித்து வழக்குரைஞர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    வழக்கு விசாரணைக்காக காவல் நிலையம் சென்றபோது காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதாக கூறி வழக்குரைஞர் தர்னாவில் ஈடுபட்டார்.
    கோவை அருகே மாதப்பூரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் பிரபாகரன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் அவரைத் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
    இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அருகே உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியன் சிலை முன்பாக வழக்குரைஞர் பிரபாகரன் தர்னாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சில வழக்குரைஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், பிரபாகரனிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வழக்குரைஞர் சமாதானம் அடையாததால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மாலை விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai