Enable Javscript for better performance
சாமளாபுரம் தடியடி சம்பவம்: கோவை மாவட்ட எஸ்.பி. விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் மதுக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி வெள்ளிக்கிழமை நேரடியாக விசாரணை நடத்தினார்.
    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மதுக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    தடியடி நடத்திய திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    இந்நிலையில், தடியடி சம்பவம் தொடர்பாக சாமளாபுரத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகளை அவர் வாங்கிச் சென்றுள்ளார்.
    இச்சம்பவத்தின்போது, சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்தும், போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டவர்களிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும் திங்கள்கிழமை (ஏப்ரல் 17) விசாரணை நடத்தப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai