Enable Javscript for better performance
நேரு கல்விக் குழுமத்தில் 1,200 பேருக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    கோவை, நேரு கல்விக் குழுமங்களில் அண்மையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு குறித்த வளாகத் தேர்வில் தேர்வானர்களுக்கான பணி நியமன ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு, நேரு கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கல்விக் குழுமங்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவர் சஞ்சீவி ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
    சிறப்பு விருந்தினர்களாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு வாகன உற்பத்தி மேம்பாட்டு பிரிவுத் தலைவர் சிவராமன், ஹெச்பி நிறுவனத்தின் முதுநிலை இயக்குநர் ரமேஷ் ராஜகோபாலன், இன்போசிஸ் திட்ட மேலாளர் சரத் அருண், விர்டுசா போலாரிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 1,200 மாணவ, மாணவிகளுக்கு 140-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai