Enable Javscript for better performance
மணியகாரன்பாளையத்தில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    மணியகாரன்பாளையத்தில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட பூமிபூஜை

    By DIN  |   Published on : 15th April 2017 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, மணியகாரன்பாளையத்தில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோவை மாநகராட்சி 41-ஆவது வார்டுக்கு உள்பட்ட மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் ஒதுக்கித் தந்தார். இந்நிலையில், உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கி வைத்தார். ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிஞர் கவிதாசன் முன்னிலை வகித்தார்.
    நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டல முன்னாள் தலைவர் நடராஜன், மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினர் வெண்தாமரை பாலு, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai