Enable Javscript for better performance
மதுக்கடைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய பொதுமக்கள்

    By DIN  |   Published on : 15th April 2017 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே புதிய மதுக்கடை அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
    கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 154 கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுக்கடை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இந்தக் கடைகளை குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சின்னியம்பாளையம் அருகே இருகூர் செல்லும் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினர். மேலும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் திரண்டு மதுக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாபு தலைமை வகித்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai