Enable Javscript for better performance
18 வயது பூர்த்தி அடையாமல் வாகனம் ஓட்டிய நூறு பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    18 வயது பூர்த்தி அடையாமல் வாகனம் ஓட்டிய நூறு பேருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 15th April 2017 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18 வயது பூர்த்தி அடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக நூறு பேருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அபராதம் விதித்து போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை மாநகரில் சாலை விபத்துகளை தவிர்க்க மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடைக் காலத்தில் விபத்துகளைத் தவிர்க்க 'வாரம் ஒரு திட்டம்' என்ற அடிப்படையில் போக்குவரத்து காவலர்கள் சோதனை மேற்கொண்டு சாலைவிதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
    மார்ச் 27 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் 3 பேர் சென்றதாக 1,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ. ஒரு லட்சத்து 6,800 வசூலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களுக்கும், அவர்களது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கும் தலா ரூ. 500 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3 நாள்களில் நடத்தப்பட்ட சோதனையில் நூறு பேர் பிடிபட்டனர். வாகன ஓட்டிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் இருந்து தலா ரூ. 500 என மொத்தம் ரூ.ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    உதவி ஆய்வாளருக்கும் அபராதம்...: இந்த வாகன தணிக்கையின்போது 18 வயது பூர்த்தியடையாத ஆயுதப் படை உதவி ஆய்வாளரின் மகனும் பிடிபட்டார். இதில் வாகனம் ஓட்டிவந்த மாணவருக்கும், அவரது தந்தையான ஆயுதப்படை உதவி ஆய்வாளருக்கும் போக்குவரத்து காவலர்கள் அபராதம் வசூலித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai