Enable Javscript for better performance
ஆனைகட்டியில் வாகனங்களை வழிமறித்த யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள செங்கல் சூளைக்கு குடிநீர் தேடி வந்த யானைகள், வாகனங்களை வழிமறித்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆனைகட்டி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள், உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. வறட்சி காரணமாக ஆனைகட்டி பகுதியில் உள்ள குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால், யானைகள் பகல் நேரங்களிலேயே குடிநீரைத் தேடி காட்டை விட்டு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்நிலையில், சனிக்கிழமை நண்பகலில் குட்டியுடன் இரண்டு யானைகள் குடிநீர் தேடி ஆர்ஷவித்யா குருகுலம் அருகே உள்ள செங்கல் சூளைக்கு வந்தன. அங்கு, சாலையோரத்தில் இருந்த குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த யானைகள், அவ்வழியே வந்த வாகனங்களை வழிமறித்தன.
    அப்போது, ஆனைகட்டியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்தை யானைகள் துரத்தின.
    இதனைப் பார்த்து பயணிகள் அலறினர். சாலையில் சிறிது நேரம் நின்றிருந்த யானைகள் அதன் பின்னர் காட்டுக்குள் சென்றன. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai