Enable Javscript for better performance
கீழே கிடந்த பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்கும் பெண்- Dinamani

சுடச்சுட

    

    கீழே கிடந்த பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்கும் பெண்

    By DIN  |   Published on : 16th April 2017 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் பேருந்து நிலையத்தில், கீழே கிடந்து எடுத்த பர்ஸை காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்த பூ விற்கும் பெண்ணின் நேர்மையை பலரும் பாராட்டினர்.
    அன்னூர் அருகே சாணாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாயகி (35). இவர் வீடுவீடாகச் சென்று பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அன்னூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த ரங்கநாயாகி, கீழே கிடந்த பர்ஸை எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    அந்த பர்ஸில் ரொக்கம் ரூ.1,030, ஏ.டி.எம்.அட்டைகள், புகைப்படங்கள் இருந்தன. துண்டுச் சீட்டில் எழுத்தப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அந்த பர்ஸ் கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கமலாவதி (55) என்பவருடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து கமலாவதி அன்னூர் காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய பர்ஸை பெற்றுக்கொண்டார்.
    கீழே கிடந்த பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ரங்கநாயகிக்கு கமலாவதி, போலீஸார் பாராட்டுத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai