Enable Javscript for better performance
கொலை வழக்கு: குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கொலை வழக்கு: குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 16th April 2017 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, சாய்பாபா காலனியில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை, சாய்பாபா காலனி பேருந்து நிலையம் எதிரே உள்ள காய்கறிச் சந்தையின் பின்புறம் உள்ள சாக்கடையில் பலத்த காயங்களுடன் கிடந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கடந்த புதன்கிழமை மீட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
    இது குறித்து சாய்பாபா காலனி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆவுடையப்பன் (30) என்பதும், சூலூரில் உள்ள கோசாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
    காய்கறிச் சந்தையில் உள்ள தனது நண்பர்களைப் பார்ப்பதற்காகச் சென்ற ஆவுடையப்பன், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது தொடர்பாக வன்னிராஜ் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், இந்த வழக்கில் தொடர்புடையை அய்யனார், காந்தி ஆகியோரைத் தேடி வந்தனர். இதில், அய்யனாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
    இதனிடையே, காந்தி என்பவரைக் பிடிக்க தனிப் படையினர் திருப்பூர் சென்றபோது, காந்தி அங்கிருந்து தப்பிவிட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஸ்டாலின் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். தனிப்படையினர், காந்தியைப் பிடிக்க மதுரை விரைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai