Enable Javscript for better performance
கோபால் சுவாமி கோயிலுக்கு செல்ல வனத் துறை திடீர் தடை- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே உள்ள கோபால் சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல வனத் துறை திடீர் தடை விதித்து, பக்தர்களின் 8 வாகனங்களை பறிமுதல் செய்ததால், மலை அடிவாரத்தில் பக்தர்கள்
    சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியை அடுத்துள்ள கோபால் சுவாமி மலையில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இக்கோயில், பொள்ளாச்சி வனச் சரகப் பகுதிக்குள் அமைந்துள்ளதால் பக்தர்கள் அங்கு செல்வதற்கு வனத் துறை ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    இந்நிலையில், இந்தக் கோயிலுக்குச் செல்வதற்காக வந்த பக்தர்களை வனத் துறையினர் சனிக்கிழமை காலை தடுத்து நிறுத்தினர். அவர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், பக்தர்களின் 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால், மலை அடிவாரத்தில் பக்தர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனத் துறையினர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    கோயிலுக்குச் செல்பவர்கள், கோயில் அருகே உள்ள தடுப்பணை நீரைப் பயன்படுத்தக் கூடாது, அங்கு உணவு சமைக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதி அளித்தனர். பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களையும், உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai