Enable Javscript for better performance
சாமளாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாரால் தடியடி நடத்தப்பட்ட சாமளாபுரம் கிராமத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    சாமளாபுரத்தில் மதுக் கடையை அகற்ற கோரி கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில் பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், பெண்களைத் தாக்கிய கூடுதல் துணைக் கண்காணிபாளர் பாண்டியராஜன் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி சாமளாபுரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். போராட்டம் நடைபெற்ற இடத்திலும், காயமடைந்தோர், பொதுமக்களிடமும் இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai