Enable Javscript for better performance
சீரான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை : சிக்கனமாகப் பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    சீரான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை : சிக்கனமாகப் பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 16th April 2017 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்த அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
    தமிழக முழுவதிலும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் முதல்வரால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 162 ஆண்டுகளுக்கும் முன்னர் இதுபோன்ற வறட்சி காணப்பட்டுள்ளது.
    இருப்பினும் இந்தச் சூழ்நிலையில் பில்லூர் அணை, பவானி ஆற்றுநீர், ஆழியாறு அணை, சிறுவாணி அணை
    ஆகியவற்றை நீராதாரமாகக் கொண்ட குடிநீர்த் திட்டங்கள் மூலமாகப் பெறப்படும் குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    மேலும், வரும் 2048-ஆம் ஆண்டின் கோவை மக்கள் தொகையைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக பில்லூர் அணையை ஆதாரமாகக் கொண்ட விரிவான குடிநீர் திட்ட அறிக்கையைத் தயார் செய்யுமாறு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான கால அளவில் குடிநீர் வழங்க உரிய திட்டம் தயாரித்து அதன்படி, நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போது நிலவும் வறட்சியைக் கருத்திக் கொண்டு பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
    இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி. மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா, மாநகரப் பொறியாளர் (பொறுப்பு) பார்வதி, குடிநீர் வடிகால் வாரிய ஆலோசர் சம்பத்குமார், செயற் பொறியாளர்கள் சுகுமார், ரவிசந்திரன், மநகராட்சி செயற் பொறியாளர் ஞானவேல் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai