Enable Javscript for better performance
பன்றிக் காய்ச்சல்: பால் விற்பனை முகவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த பால் முகவர் கோவையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (48). இவர் அப்பகுதியில் பால் விற்பனை முகவராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு நடத்திய பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது.
    இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் உடல்நிலை சனிக்கிழமை மோசமடைந்தது.
    இந்நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai