Enable Javscript for better performance
பொள்ளாச்சி அருகே 7,344 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே 7,344 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

    By DIN  |   Published on : 16th April 2017 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி அருகே மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7,344 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை செய்துள்ளனர்.
    கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மலையடிவார கிராமமான தம்மம்பதியில் சிவானந்தம் (48) என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மதுபாட்டில்களை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக மது விலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மது விலக்குப் பிரிவு ஏடிஎஸ்பி சந்திரமோகன், டிஎஸ்பி மீனாட்சி, ஆய்வாளர் நடேசன் அடங்கிய குழுவினர் அந்தத் தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை சோதனையிட்டனர்.
    அங்கு, 7,344 பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், பதுக்கலுக்கு உடந்தையாக இருந்ததாக சோமந்துறையைச் சேர்ந்த செந்தில்வேல் (41), அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி மது பாட்டில்கள் வாங்கியதாகவும், தேர்தல் ரத்தானதால் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் மது பாட்டில்கள் மொத்த விலைக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
    சோமந்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் இந்த மது பாட்டில்களை கொள்முதல் செய்து, பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவரையும், தோட்டத்தின் உரிமையாளரான சிவானந்தத்தையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
    இது குறித்து மது விலக்கு போலீஸார் கூறுகையில், 'பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இருவரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனத் தெரியவரும்' என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai