மாடுகளை அதிகமாக ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கைது
By DIN | Published on : 16th April 2017 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆந்திரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அதிகமான மாடுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி, தில்லை நகர் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், மாடுகளை அதிகமாக ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற மகாலிங்கபுரம் போலீஸார், லாரியை சோதனை செய்தபோது அதில் 21 மாடுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாடுகளை கோவையில் உள்ள கோ சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியின் ஓட்டுநரான ஆந்திரம், விசாகபட்டினத்தைச் சேர்ந்த மணிபாபுவை கைது செய்தனர். விசாரணையில், இந்த மாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்ததாகத் தெரியவந்தது.