Enable Javscript for better performance
ரூ.17.62 கோடி மதிப்பிலான 1.90 ஏக்கர் நிலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.17.62 கோடி மதிப்பிலான 1.90 ஏக்கர் நிலம் மாநகராட்சியால் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
    இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கோவை மாநகராட்சி மூலமாக கடந்த ஜனவரியில் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் நிலமும், பிப்ரவரியில் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் நிலமும், மார்ச்சில் ரூ.15.86 கோடி மதிப்பிலான 2.45 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.
    இந்த நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளப்பட்டி (வார்டு எண் 36) ரத்தினம் நகரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5.37 கோடி மதிப்பிலான 53.71 சென்ட் நிலமும், மேற்கு மண்டலம் வடவள்ளி (வார்டு 17) லட்சுமி நகரில் ரூ.3 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலமும், வெள்ளிங்கிரி நகரில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 18 சென்ட் ஆக்கிரமிப்பு நிலமும் மீட்கப்பட்டன.
    அதே போல், வடக்கு மண்டலம் துடியலூரில் (வார்டு எண் 4) ஜான் பாஸ்கோ நகரில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 43 சென்ட் நிலமும், தெற்கு மண்டலம் குமாரபாளையத்தில் (வார்டு எண் 76) மீனாட்சி நகரில் ரூ.5.25 கோடி மதிப்பிலான 35 சென்ட் நிலம் என மொத்தம் ரூ.17.62 கோடி மதிப்பிலான 1.90 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai