Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

    By DIN  |   Published on : 16th April 2017 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய மாணவர் அமைப்புச் சேர்ந்த 20 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    கோவை ரயில்நிலையம் முன்பாக அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர் தலைமையில்
    இப்போராட்டம் நடைபெற்றது. இதில், பாடைகட்டி அதில் ஒருவரைப்படுக்கவைத்து நுதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விவசாயிகளின் வங்கிக் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான நிவாரண நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 32 நாள்களாக தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாஜக தலைவர்கள் ஏளனமாகப் பேசி வருவது கண்டிக்கத்தக்கது எனத் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
    இதைத்தொடர்ந்து ரயில் மறியலுக்கு முயன்ற மாவட்டத் தலைவர் ச.பூர்ணிமா நந்தினி, மாவட்ட துணைச் செயலாளர் சு.பிரசாத், துணைத் தலைவர் ஜெ.ஸ்டாலின் உள்ளிட்ட 20 பேரை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai