Enable Javscript for better performance
வேளாண் பல்கலைக்கழக துறை தலைவருக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில்நுட்பத் தலைவரும், புதுமை மையத் திட்ட இயக்குநருமான செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    தமிழ அரசு, ஒவ்வோர் ஆண்டும் வேளாண்மை மற்றும் அறிவியல் துறைக்கான விருதுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களை கௌரவித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான வேளாண் ஆராய்ச்சியாளர் விருதுக்கு செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    இவர், துரித உணவுகளை உட்கொண்டு வாழும் மக்களிடையே, மறைந்துபோன சிறு தானிய உணவுகளை மீட்டுருவாக்கம் செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ராகி, கேழ்வரகு, கோதுமை, பனி வரகு, சாமை போன்ற பயிர்களைத் தனது ஆய்வுக்கு உள்படுத்தி, இதில் ஐந்து புதிய ரகங்களை உருவாக்கியுள்ளார். மேலும், இந்த ரகங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ந்துள்ளார்.
    சிறு தானிய உணவுப் பழக்கத்தை மீட்டதற்கும், மக்காச் சோளத்தில் மரபணு குறியீடு மூலமாக அதிக வைட்டமின் கொண்ட பீட்டா கரோட்டினை உருவாக்கியதற்காகவும், தமிழகத்தின் பருவ நிலைக்கு ஏற்ப ரொட்டி கோதுமை, சம்பா கோதுமை ரகங்களை உருவாக்கியதில் வெலிங்டன் மத்திய கோதுமை ஆராய்ச்சி நிலையத்தில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்படஉள்ளது.
    இவர், உதிரும் தன்மையுடைய தாவரத்தில் உதிருவதற்கு காரணமாக இருக்கும் மூலக்கூற்றை பார்லி தாவரத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருடன் இணைந்து கண்டறிந்துள்ளார். தற்போது, குதிரைவாலியில் அதிக அளவிலான இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து ஆகியவற்றை உருவாக்குவதற்கான மூலக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    இவருடன் சேர்ந்து மற்ற துறை ஆராய்ச்சியாளர்கள் 9 பேர் இவ்விருதை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் அறிவியல் புதுமைகள் கண்டுபிடிப்பின் மகத்துவ மையத்தில் தமிழக அரசு நிதி உதவியுடன் சுமார் ரூ.6 கோடி செலவில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டமும், ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இவர் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் பல பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வேளாண் ஆராய்ச்சியாளர் விருதானது ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்கமும், பட்டயமும் கொண்டதாகும். இவ்விருதை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai