Enable Javscript for better performance
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இலவச விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இலவச விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 17th April 2017 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பி.எஸ்.ஜி.ஜி. கன்யா குருகுலம் மற்றும் பி.எஸ்.ஜி.கெங்கா நாயுடு அறக்கட்டளையால் பராமரிக்கப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு உள்பட்ட இலவச மாணவியர் விடுதியில் சேர மே 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு உள்பட்டு பெண்களுக்கான ஒரு ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6-ஆம் வகுப்பு முதல் தமிழ், ஆங்கில வழியில் கல்விக் கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளுடன் இணைந்து இலவச விடுதி இயங்கி வருகிறது.
    இதில் தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ள பெற்றோர் மற்றும் காப்பாளர்களின் பெண் குழந்தைகளுக்கு 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் இலவச விடுதி இயங்கி வருகிறது.
    இந்த விடுதியில் சேர்ந்து கல்வி பயில விரும்புவோர், செயலாளர், பி.எஸ்.ஜி.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள், சிவில் விமான நிலையம் அஞ்சல், கோவை-641014 என்ற முகவரிக்கு மே 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai