Enable Javscript for better performance
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வக உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
    இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறியதாவது:
    தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
    எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மகளிர், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்றோருக்கான ஒதுக்கீடு, முன்னுரிமை பெற்றவர்களுக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாசாரம் ஆகியவை இனசுழற்சி முறையுடன் கடைப்பிடித்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
    இந்தப் பட்டியல் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஏப்ரல் 17) காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai