Enable Javscript for better performance
இலவச கோடை காலப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவை தடகள கிளப், பார்க் கல்வி நிறுவனம் ஆகியன சார்பில் இரண்டாம் கட்ட இலவச கோடைக் காலப் பயிற்சி முகாம் மே 30-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
    கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில், 6 வயது முதல் 25 வயது வரை மற்றும் மூத்த தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் கட்டப் பயிற்சி ஏப்ரல் 18 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    இந்த முகாமில், தடகள விளையாட்டில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் தடகள விளையாட்டு குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி முகாம் தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai