Enable Javscript for better performance
குற்ற நடவடிக்கைக்கு ஆளான முதன்மைக் கல்வி அலுவலரை இடைநீக்கம் செய்ய கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குற்ற நடவடிக்கைக்கு ஆளான முதன்மைக் கல்வி அலுவலரை இடைநீக்கம் செய்ய கோரிக்கை

    By DIN  |   Published on : 17th April 2017 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரை உடனடியாக தாற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
     இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
     கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற துப்புரவுப் பணியாளர்களுக்குப் பணப் பலன்களை வழங்க மறுத்த விவகாரத்தில், அப்போது குழித்துறை கல்வி அலுவலராகப் பணியாற்றியவரும், தற்போது கோவை முதன்மைக் கல்வி அலுவலருமாக உள்ள அருள்முருகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யும்படி, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 11-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
     கல்வித் துறையில் அதிகாரிகள் மீது இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற உத்தரவுகள் வரும்போது அவர்களைக் காப்பாற்றுவதற்கே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாடப்புத்தகங்கள் காணாமல் போனது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது, நல்லாசிரியர் விதிமுறைகள் மீறப்பட்டது போன்ற அதிகாரிகள் மீதான புகார்களில், சம்பந்தப்பட்டவர்களை வெறுமனே பணியிட மாறுதல் மட்டுமே செய்கின்றனர். அத்துடன், புகாரில் சிக்கியவர்களுக்கு மேல் அதிகாரிகள் பாதுகாப்பும் அளிக்கின்றனர்.
    எனவே, இந்த நிலை தொடராமல் இருக்க, தற்போது உயர் நீதிமன்றத்தால் கைது நடவடிக்கை உத்தரவுக்கு ஆளாகியுள்ள முதன்மைக் கல்வி அலுவலரை பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தாற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai