Enable Javscript for better performance
சாமளாபுரம் தடியடி விவகாரம்: காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கைகோரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் மனு- Dinamani

சுடச்சுட

    

    சாமளாபுரம் தடியடி விவகாரம்: காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் மனு

    By DIN  |   Published on : 17th April 2017 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கிய காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து அந்த இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் டி.குமாரவேலு, செயலாளர் என்.கே.வேலு, பொருளாளர் பி.கந்தசாமி ஆகியோர் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
     திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கதாகும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டதால்தான் அவர்களை அடிக்க நேர்ந்தது என்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானதாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவை சரக டிஜஜி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் தாக்குதலை நியாயப்படுத்தி பேசியுள்ளதால் இந்த விசாரணை உண்மையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் இருதரப்பினரையும் ஒரே இடத்தில் வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai