Enable Javscript for better performance
சின்னத் தடாகம் அருகே யானை தாக்கி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    துடியலூரை அடுத்த சின்னத் தடாகத்தில் யானைத் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
    ஆனைகட்டி வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களான பெரிய தடாகம், சின்னத் தடாகம், மாங்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளது.
    இதன்காரணமாக இப்பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதில்லை. இந்நிலையில், கேரள மாநிலம், கோட்டைத் துறையைச் சேர்ந்த முத்துசாமி (55) என்பவர் சின்னத் தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார்.
    இவர், அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு சனிக்கிழமை இரவு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மறைவில் நின்றிருந்த யானை இவரைத் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த துடியலூர் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai