Enable Javscript for better performance
சுப்பநாயக்கன்புதூரில் எம்எல்ஏ குறைகேட்பு- Dinamani

சுடச்சுட

    

    கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, கோவை மாநகராட்சி 42-ஆவது வார்டுக்கு உள்பட்ட சுப்பநாயக்கன்புதூர் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.
    பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும், சுப்பநாயக்கன்புதூரில் உள்ள குட்டைகளில் கட்டடக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும், சிந்தாமணி விநாயகர் கோயில் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும், செயல்படாமல் உள்ள பட்டுப்புழு மையத்துக்குள் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும், மயானத்தில் ஈமச்சடங்கு மண்டபம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
    இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai