Enable Javscript for better performance
சூறாவளியால் 6 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூரில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் 6 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
    அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை 15 நிமிடங்கள் பலத்த சூறாவளி வீசியது. இதில் பசூர், பெத்தநாயக்கன்பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 6 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. கஞ்சப்பள்ளியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் கோவை சாலையில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. அதே பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளும் சூறாவளியால் சேதமடைந்தன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai