Enable Javscript for better performance
செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கினால் ரூ.1000 அபராதம்: மாநகர காவல் துறை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கினால் ரூ.1000 அபராதம்: மாநகர காவல் துறை அறிவிப்பு

    By DIN  |   Published on : 17th April 2017 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகரில் திங்கள்கிழமை முதல் செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கினால் குறைந்தபட்சம் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

    கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோடைக் காலத்தில் விபத்துகளைத் தவிர்க்க "வாரம் ஒரு திட்டம்' என்ற அடிப்படையில் போக்குவரத்து காவலர்கள் சோதனை மேற்கொண்டு சாலைவிதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
    மார்ச் 27 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் 3 பேர் சென்றதாக 1,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ. ஒரு லட்சத்து 6,800 வசூலிக்கப்பட்டது. ஏப்ரல் 3 முதல் 9-ஆம் தேதி வரை வாகனப் பதிவு எண் பலகைகள் சரியாக எழுதாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 17 முதல் 23-ஆம் தேதி வரை செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்கினால் குறைந்தபட்சமாக ரூ. 1,000 அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சோதனையில் போக்குவரத்து காவல் துறையினர் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரும் சோதனை நடத்த காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
    தலைக்கவசம் கட்டாயம்:  
    இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கோவை மாநகரில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகள், அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அறிவுறுத்த வேண்டும் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக குடியிருப்போர் சங்கங்களுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai