Enable Javscript for better performance
சோதனைச் சாவடிகளில் அதிகக் கட்டணம் வசூல்: அதிருப்தியில் சுற்றுலாப் பயணிகள்- Dinamani

சுடச்சுட

    

    சோதனைச் சாவடிகளில் அதிகக் கட்டணம் வசூல்: அதிருப்தியில் சுற்றுலாப் பயணிகள்

    By DIN  |   Published on : 17th April 2017 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆழியாறு, வால்பாறை வனத் துறை சோதனைச் சாவடிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    வால்பாறைக்கான வழித் தடத்தில் ஆழியாறு, அட்டகட்டி பகுதிகளில் வனத் துறையினர் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். இதில், அட்டகட்டி சோதனைச் சாவடியில் சோதனை மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால், ஆழியாறு சோதனைச் சாவடியில் வால்பாறைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரிடமும் நுழைவுக் கட்டணமாக தலா ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் வால்பாறையில் வனத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிக்கு செல்வதற்க்கும் தலா ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. வால்பாறைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரிடமும் ரூ. 60 வசூலிக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    இதுகுறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறியதாவது:
    வால்பாறைக்கு சுற்றுலா வந்து சென்றால் ஒவ்வொருவரும் ரூ. 60 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், சுற்றுலாப் பகுதிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. ஆகவே, சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறைப்பதுடன், சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai