Enable Javscript for better performance
திவிக பிரமுகர் கொலை வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திவிக பிரமுகர் கொலை வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்

    By DIN  |   Published on : 17th April 2017 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் திராவிடர் விடுதலைக் கழகப் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
     கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் வசித்து வந்தவர் ஃபாரூக் (31). இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிர உறுப்பினராக இருந்து வந்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கைகளை அவரது முகநூல், கட்செவி அஞ்சலிலும் பதிவிட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
     இந்த நிலையில், கடந்த மார்ச் 16-ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே மர்ம நபர்களால் ஃபாரூக் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
     இதுகுறித்து பெரியகடைவீதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக அப்துல் முனாப், ஜாபர் அலி, அக்ரம் ஜிந்தால் ஆகியோரைக் கைது செய்தனர்.
     இதனிடையே,  போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த எம்.அன்ஷத் (31), தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஏ.சதாம் உசேன் (28), கரும்புக்கடையைச் சேர்ந்த யு.சம்சுதீன் (31) ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  பின்னர் 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.  
     இந்நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்த தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் ஏற்கெனவே அனுமதி கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சசிகுமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அண்மையில் உத்தரவிட்டார்.
      இந்த உத்தரவைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ஃபாரூக் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai