Enable Javscript for better performance
பேரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பேரூர் அருகே மாதம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பேரூரை அடுத்த கரடிமடையில் சில நாள்களாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறுவாணி சாலையில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். பின்னர் அவர்கள், மாதம்பட்டி நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து அங்கு வந்த பேரூர் காவல் துறையினர், தென்கரை பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
    இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பேரூர்-ஆலாந்துறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai