Enable Javscript for better performance
மது பாட்டில் பதுக்கல் விவகாரம்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மது பாட்டில் பதுக்கல் விவகாரம்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 17th April 2017 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் உள்பட மூவர் மீது மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி அருகே தம்மம்பதி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 7,344 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செந்தில்வேல், மெய்ஞானமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.
    இந்நிலையில், மது பாட்டில்களை பதுக்கி வைக்க இடம் தந்த சிவானந்தம், மதுபாட்டில்களை விற்பனை செய்த புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த நந்தகுமார், மது பாட்டில்களை பதுக்கிய சோமந்துறை பகுதி அதிமுக பிரமுகர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai