Enable Javscript for better performance
வழக்குரைஞரைத் தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் வழக்குரைஞரைத் தாக்கியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகியை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
     கோவை, ஆர்.எஸ்.புரம் லாலிசாலை பண்ணாரி அம்மன் நகரில் வசித்து வருபவர் வழக்குரைஞர் நாகராஜ் (35). காங்கிரஸ் கட்சியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், தொழிற்சங்க பிரதிநிதியாகவும் உள்ளவர் செல்வம் (50). இவர் உள்பட 3 பேர் நாகராஜ் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்றுள்ளனர். அங்கு நாகராஜைத் தாக்கியதுடன், அவரது காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாகராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
     இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர், செல்வத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் இருவரைத் தேடி வருகின்றனர். நிலம் விற்பனையின்போது வர வேண்டிய கமிஷன் தொகை தொடர்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai