Enable Javscript for better performance
வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து வாளையாறு காவல் துறையினர் கூறியதாவது:
    கோவையை அடுத்த க.க.சாவடியைச் சேர்ந்தவர் முத்து (18). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை, கிரிக்கெட் விளையாடி விட்டு, வாளையாறு அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அணையின் மதகு அருகே குளித்துக் கொண்டிருந்தபோது, முத்து சேற்றில் சிக்கினார்.
    இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, வாளையாறு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், முத்து உயிரிழந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வாளையாறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் தற்போது குறைந்த அளவே நீர் உள்ளது. அணையில் சேறும், சகதியும் அதிகம் உள்ளதால், அணையில் குளிக்க வேண்டாம் என்று வாளையாறு காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. எனினும், அணையின் பின்புறம் தமிழகப் பகுதியில் இருந்து செல்லும் இளைஞர்கள் அறிவிப்பு பலகைகளைக் கவனிக்காமல் குளிப்பதால் உயிரிழப்புகள் நிகழ்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai