Enable Javscript for better performance
அட்டகட்டியில் நாளை மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 19) மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து, வால்பாறை வட்டாட்சியர் தா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    வால்பாறை வட்டத்துக்கு உள்பட்ட அட்டகட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 19) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார்.
    அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ள இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்துத் தீர்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai