Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து மடிக்கணினி, பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.                                                
    பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரிபாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 3 நாள்கள் விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது.
    பள்ளித் தலைமை ஆசிரியர் தில்லைநாயகம் தனது அறையைத் திறக்கச் சென்றபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 மடிக்கணினிகள், ரூ. 7,500, டி.வி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்த புகாரின்பேரில் ஆழியாறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai