Enable Javscript for better performance
இன்றுமுதல் தொடர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சோமனூரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
    ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் 2014-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்கவேண்டும். மேலும், ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே வழங்கிய கூலியையும் குறைத்து வழங்கியுள்ளனர். இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
    எனவே, பிடித்தம் செய்த கூலியை முழுமையாக திருப்பி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்க்காமல் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மெத்தனமாக செயல்படும் கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai