Enable Javscript for better performance
உயர் கல்வியின் தரத்தை உயர்த்த ரூ. 2,300 கோடி ஒதுக்கீடு: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    உயர் கல்வியின் தரத்தை உயர்த்த ரூ. 2,300 கோடி ஒதுக்கீடு: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

    By DIN  |   Published on : 18th April 2017 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ரூ. 2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
    உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த 2013-ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை தொடங்கியது.
    இதன் மூலமாக, தகுதியுடைய உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான நிதியை மாநில அரசுகள் மூலமாக ஒதுக்கீடு செய்து, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 மாநிலங்களில் 17 திட்டங்கள் காணொலிக் காட்சியின் மூலமாகத் திறந்து வைக்கப்பட்டன.
    அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2014-இல் ரூ. 20 கோடி வழங்கப்பட்டது. அதில், முதல்கட்டமாக ரூ. 2.5 கோடி கட்டுமான நிதியாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியுடன் சேர்த்து ரூ. 5.50 கோடி மதிப்பில் பெண்கள் விடுதியான "வாசுகி மகளிர் விடுதி' கட்டப்பட்டுள்ளது.
    இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காணொலிக் காட்சியின் மூலமாகப் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், "நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ரூ. 2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
    இதன் தொடக்கவிழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், துறையின் முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோரும் காணொலிக் காட்சியின் மூலமாகப் பங்கேற்றனர்.
    இவ்விழாவில், தமிழக அரசின் தொழிற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந்திர ரத்னு, ஆர்.யூ.எஸ்.ஏ. தமிழகத் திட்ட மேலாளர் சுப்புலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ஈ.சந்திரா, பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆ.கணபதி, பதிவாளர் பி.வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai